வயது முப்பின் காரணமாக உயிரிழந்த முதியவரின் உடல் மருத்துவ கல்லூரி க்கு தானம்  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 9 September 2024

வயது முப்பின் காரணமாக உயிரிழந்த முதியவரின் உடல் மருத்துவ கல்லூரி க்கு தானம் 

வேலூர் செப்.9-

வேலூர் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காட்பாடி வட்ட ரெட்கிராஸ் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு இணைந்து மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக இறந்த பிறகு முழு உடலையும் தானம் செய்வதாகும். மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலைப் புரிந்து கொள்ள உதவுவதற்கும், அறிவியலின் முன்னேற்றத்திற்கும் மறைந்த டி.வள்ளியம்மாள் (வயது 85) உடல் தானமாக வழங்கியது.  

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) வேலூர் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் டி.முரளி அவர்களின் தாயார் டி வள்ளியம்மாள் (வயது 85)அவர்கள் உடல்நல குறைவு காரணமாக நேற்று மறைந்தார் அவர்கள் உயிராக இருக்கும் பொழுது தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் அன்னாரின் மகன் டி.முரளி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கினார். 
இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையில் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்தனன்  மேலாண்மை குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ் குமார் ஜெயின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ் தயாநிதி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், பி.காத்தவராயன், வட்ட செயலாளர் எஸ்.செல்வி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் அஜீஸ்குமார் ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் வாரா ஜே.சி.ஐ வேலூர் சங்கத்தின் துணைத் தலைவர் மோசஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad