தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலூரில் ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 5 September 2024

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலூரில் ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலூரில் ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

     வேலூர் செப்.5-

  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலூரில் ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
 பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் திமுகவில் தேர்தல் வாக்குறுதி எண்.309ஐ நடைமுறைப்படுத்தி பழைய பென்சன் திட்டம் தொடர வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் முதுநிலை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார் 
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான முனைவர் செ.நா.ஜனார்த்தனன் துவக்க உரையாற்றினார்.
அமைப்பில் மாநில துணைத்தலைவர் பி ஜெயப்பிரகாஷ் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் அஜிஸ்குமார் மகளிர் அணி செயலாளர் கே ஜி தேவி அமைப்புச் செயலாளர் ஈஸ்வர ஆனந்த் தலைமையிட செயலாளர் சி சுதாகர் மாவட்டத் துணைத் தலைவர் சுதாகர் வி வித்யாலட்சுமி மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜன் வேலூர் கல்வி மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 
மாவட்ட செயலாளர் கே.மஞ்சுளா வரவேற்பு பேசினார் 
தோழமை சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.இளங்கோ உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம் எஸ் செல்வகுமார் மாவட்ட பொருளாளர் தி மலர்விழி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பா வேலு துணைத் தலைவர் எம் எஸ் தீனதயாளன் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர் சேகர் தமிழ்நாடு உழுது வழி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ் ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் வாரா உள்ளிட்டோர் வாழ்த்து பேசினார் நிறைவாக வேலூர் கல்விமாவட்ட தலைவர் வி.திருக்குமரன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad