குடியாத்தம் செப்.28-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில் இந்துக்கள் அனைவரும் புனிதமாக கருதக்கூடிய திருப்பதி பிரசாதமான லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக கூறப்பட்டது இதனை கண்டித்து இந்துக்களின் மனக்குமுறலாக புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை எகாதசி அன்று அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சூரை தேங்காய் உடைத்து பரிகாரமாக நூதன முறையில் வேண்டுதல் வைத்தனர்.
இதில் குடியாத்தம் நகரம் அரசமரம் ஆஞ்சநேயர் கோவில் பலமநேரி ரோடு ரோடு பக்த ஆஞ்சநேயர் கோவில் பஜார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் கவுண்டன்ய மகாநதி ஜல ஆஞ்சநேயர் கோவில் நேதாஜி சவுத் சீதாராம ஆஞ்சநேயர் கோவில் காட்பாடி ரோடு வீர ஆஞ்சநேயர் கோவில் உட்பட குடியாத்தம் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சூரை தேங்காய் உடைத்து நூதனமாக வேண்டுதலை நிறைவேற்றினர் இந்த நிகழ்விற்கு இந்து முன்னணி குடியாத்தம் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார் சுஜித், மணி , லோகேஷ், யோகி, முன்னிலை வகித்தனர் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மணி, ஜெகா, வெங்கட், மாணிக்கம், சரவணன், ஆனந்த், ஆதி கேசவன், கோகுல், சுரேஷ், மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment