மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை உறுதிபடுத்திட கோரி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா போரட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 3 September 2024

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை உறுதிபடுத்திட கோரி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா போரட்டம்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்
கட்டணமில்லா சிகிச்சை உறுதிபடுத்திட கோரி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர்
இராணிப்பேட்டையில் தர்ணா போரட்டம் நடைபெற்றது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை உறுதிபடுத்திட கோரி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் இராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.சண்முகம் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.இரவி, பி.ஞானேஸ்வரி,  இணை செயலாளர்கள் சி.தாமோதரன், சி.மதியழகன், எம்.மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினரும் வேலூர் மாவட்ட அமைப்பளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார்.
முன்னதாக மாவட்ட பொருளாளர் கே.ஆறுமுகம் வரவேற்று பேசினார்.  மாநில துணைத்தலைவர் நிலவு குப்புசாமி, மாவட்ட செயலாளர் எ.அப்துல்ரஹீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பாண்டுரெங்கன், பொதுக்குழு உறுப்பினர் கே.இராமச்சந்திரன், ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என்.சுந்தரேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துரை ஓய்வூதியர் சங்க வேலூர் மண்டல செயலாளர் என்.கோவிந்தசாமி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மணிகண்டன்  ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மருத்துவ காப்பீடு திட்டமா, களவாடும் திட்டமா, அரசாணை எண்.204ன் படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிபடுத்துக.
மத்திய அரசே சந்தா தொகைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. (G.S.T.) வரியை இரத்து செய்.  
 சிகிச்சைச் செலவைக் குறைத்து வழங்கும் யுனைட்டட் இந்திய , எம்.டி.இந்தியா ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக, 
அதிக கட்டணம் வக்ஷல் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திடுக, 
காப்பீடு திட்டத்தில் செலவிட்ட மருத்துவ செலவினங்களை மீளக் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களின் மீது விரைவு நடவடிக்கை வேண்டும்.  
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் முழுமையாக பயன் தர கருவூல ஆணையர், ஓய்வூதிய இயக்குநர் மற்றும் ஓய்வூதிய சங்கப் பிரநிநிதிகள் உள்ளடக்கிய குழுவை அமைத்திடுக.  
செலவு தொகைகளை மீள கேட்டு அனுப்பப்படும் நிலைகளை அறிந்திட டிராக்கிங் சிஸ்டம் (Tracking System) வலைதளத்தை உருவாக்கிடுக.  
திட்டத்தில் உள்ள இடர்பாடுகளையும் குறைகளையும் களைந்திடுக அல்லது தமிழக அரசே நேரடியாக ஏற்று நடத்திடுக. என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.  
வட்ட கிளை நிர்வாகிகள் வாலாஜா- எம்.குமாரசாமி, ஆர்.நாகராஜன், சோளிங்கர் -  எஸ்.பொன்னுரங்கம், அரக்கோணம்-பி.ஜெயச்சந்திரன், வி.செல்வநாதன், கே.சற்குணம், நெமிலி-எ.வேதய்யா, என்.உத்தமன், ஜி.மெய்யன்பன், ஆற்காடு சி.சுகுமார், வி.ஏழுமலை, பி.தினகரன், கலைவை ஜி.வி.இராஜசேகரன், ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் த.குமார், எம்.தண்டபாணி உள்பட பெண்கள் 10 பேர் உள்பட 60பேர்  பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad