வேபபங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகிய மூவரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 September 2024

வேபபங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகிய மூவரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!

வேபபங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகிய
மூவரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!

வேலூர், செப்.02 

வேலூர் மாவட்ட காவல் வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பணியை சரி யாக செய்யாததாலும், வரப் பெற்ற புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காட்டியதாக காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு, உதவி காவல் ஆய்வா ளர் குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபிநாத் ஆகிய 3 பேரை ஆயுதப்ப டைக்கு மாற்றம் செய்து

கண்காணிப்பாளர் மதிவா ணன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 19 ஆம் தேதி ஒடுக் கத்தூர் அடுத்துள்ள ஊரை சேர்ந்த சேர்ந்த பெண் ஒருவர் பிரேம்குமார் என்ற வாலி பர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு இன்ஸ்டாவில் மற் றொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததை தட்டி கேட்டதால் தன்னி டம் தனிமையில் இருந்த

வீடியோ மற்றும் போட் டோவை சமூக வலை தளத் தில் பதிவிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டியதாக வேப்பங் குப்பம்காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை உரிய நேரத்தில் விசாரனை செய்து வழக்குப் பதிவு செய்ய தவறியதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலப்பாதுகாப்பு துறையில் அப்பெண் புகார்
அளித்தார். மேலும் கடந்த

2 தினங்களுக்கு முன்பாக எல்லப்பன் பட்டி கிராமத்தில் முனீஸ்வரன் கோவில் திருவிழா தொடர் பாக இரு தரப்பினர் (ஒரே சமூகத்தினர்) மாவட்ட ஆட் சியர்அலுவலகத்தில் நடந்த அமைதிக் குழு பேச்சுவார்த் தைக்கு பிறகு ஆட்சியர் அலுவலகத்திலேயே மோதிக் கொண்டனர். இது குறித்து முறையான தகவல் அளிக்காதது போன்ற தொடர் புகார்கள் காரண மாக, பணியை சரிவர செய் யாததாலும் வழக்குப் பதிவு செய்யவும், பாதுகாப்பு கொடுப்பதில் அலட்சியம் காட்டியதாக கூறி 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 


No comments:

Post a Comment

Post Top Ad