குடியாத்தம் ஆரியா வித்யாஷரம் சி பி எஸ் இ பள்ளியில் ஆசிரியர்களுக்கான புத்தாகப் பயிற்சி அளித்தல்
குடியாத்தம் செப்.23-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ஆர்யா வித்யாஷரம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு திறனாய்வு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில் சென்னையில் இருந்து ஆசிரியர் சிறப்பு மையத்தின்
(chennai centre of Excellence ) சார்பாக பயிற்சியாளர்கள் திருமதி ஜெயா பிரசாத், விஜி மோன், ஐயப்பன், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சி பி எஸ் இ பள்ளி ஆசிரியருக்கு ஆர்யா பள்ளியில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தலைவர் ஜி. தண்டபாணி மேலும் பள்ளியின் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் எஸ். ஸ்ரீதர் மற்றும் பள்ளியின் முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி அவர்கள் பள்ளியின் அனைத்து அறங்காவலர்களும் கலந்து கொண்டு குத்துவிளக்கினை ஏற்றி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு ஆர்யா வித்யாஷ்ரம் பள்ளியின் தலைவர் ஜி தண்டபாணி தலைமை தாங்கினார்
பள்ளியின் முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி சிறப்புரையாற்றினார்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர் டி. அனீஸ் வரவேற்புரை ஆற்றினார்
இங்கு சி பி எஸ் இ ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மாணவர்களின் தன்னுள் மறைந்திருக்கும் திறமைகளை எப்படி வெளியே கொண்டு வருவது என்பதை பற்றியும், மாணவர்களை எப்படி ஊக்குவிப்பது என்பதை பற்றியும் பயிற்சிகள் மிகச் சிறப்பாக கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு இறுதியாக ஆரியா பள்ளியின் துணை முதல்வர் முனைவர் க .கஜலட்சுமி நன்றி உரையாற்றினார். நாட்டுப் பன்னுடன் இனிதே முடிவடைந்தது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment