வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்வு நாள் கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 11 September 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்வு நாள் கூட்டம்

குடியாத்தம் செப்.11-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று11.09.24.புதன்கிழமை நடைபெற்றது.

01. கூட்டத்திற்கு முறையாக துறைரீதியான அதிகாரிகள் வருவதில்லை வருகின்ற அதிகாரிகள் சென்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவதில்லை.  இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வட்டாட்சியர் அவர்கள் முறைப்படுத்தவேண்டும்.

02.மேல் செட்டி குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ராஜா குப்பம் எல்லையிலிருந்து சரக்குப்பம் ரோடு வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற பட வேண்டும்.

03.கூடநகரம் ஆரம்ப சுகாதார நிலையம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது அடிப்படை வசதிகள் கூட இல்லை இதனால் மகப்பேறு அவசர சிகிச்சை பெறமுடியாமல் தாய்மார்கள் மிகவும் அவதிப்படும் அவலநிலை உள்ளது இதை போக்கும் வகையில் புதிய கட்டிடம் போர் கால அடிப்படையில் கட்டி தரவேண்டும்.

04.மேலாளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தமேடு பகுதி மக்கள் அவசர தேவைக்கும், மருத்துவம் சேவைக்கும் பாலத்தை கடந்துதான் குடியேற்றம் வரவேண்டும். தற்காலிகமாக அமைக்கப்பட்ட இரும்பு பாலம் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை மழை காலம் தொடங்குவதால் சிறிய பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

05.அகரம்சேரியிலிருந்து மேலாளத்தூர் வழியாக குடியாத்தம் வருவதற்கு அகரம்சேரி மேலாளத்தூர் இடையே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06.காட்டு பன்றிகள் மற்றும் மயில்கள் பயிர்களை மிகவும் சேதப்படுத்துகின்றன
இதனை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

07.பட்டு கிராமம் வழியாக ஆலம் பட்டறை கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் போசினார்கள்.இக்கூட்டத்திற்கு
தலைமை இடத்து துணை தாசில்தார் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad