அக்சிலியம் கல்லூரியில் (தன்னாட்சி),
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் குடிமை பணிகள் நோக்கு நிலை நெறிக்காட்டுதல் நிகழ்ச்சி
காட்பாடி செப்.19-
வேலூர் மாவட்டம் காட்பாடி அக்சிலியம் கல்லூரியில், 18.09.2024 இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக காலை 11.00 மணி அளவில் கல்லூரிக் கலையரங்கில் ஆளுமை நுழைவாயில் குடிமை பணிகளின் நோக்கு நிலை நெறிகாட்டுதல் நிகழ்வானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சைதை சா. துரைசாமி, நிறுவனர், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் அகாடமி , சென்னை மாநகர முன்னாள் மேயர் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவிகளின் பொது அறிவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வினாக்களைத் தொடுத்து , சரியான விடைகளை கூறிய மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார். கல்வி அறிவால் வாழ்வில் மிக உயரிய வெற்றிகளை அடைய முடியும் என்பதையும் தெளிவாக சிறப்பு விருந்தினர் அவர்கள் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.
வேலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாளர் S.R.K. அப்பு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோதரி ஆ. மேரி ஜோஸ்பின் ராணி அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ. ஆரோக்கிய ஜெயசீலி அவர்கள் நோக்கவுரை வழங்கினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் V.R. பிரியதர்ஷினி ஆங்கிலத்துறை அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறைவாக முனைவர் E. லதா , உதவிப் பேராசிரியர், ஆங்கிலத் துறை அவர்கள் நன்றியுரை நவின்றார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment