வேலூர் மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மீளாய்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

வேலூர் மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மீளாய்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கம்

வேலூர் மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மீளாய்வு மற்றும் பயிற்சி கருத்தரங்கம்

வேலூர் செப்1

வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் 'வானவில் மன்றம்' திட்டம் 2023-24ஆம் கல்வியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் ஆகஸ்டு மாத வேலை அறிக்கை சமர்பித்தல் மற்றும் மீளாய்வுக் கூட்டமும் செப்டம்பர் மாதத்திற்கான பரிசோதனைகளை விளக்கும் பயிற்சியும் காலை 10:00 மணிக்கு ஆரம்பமானது. 
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. செ.மணிமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் திரு.எஸ்.மகாலிங்கம் அவர்கள் கூட்டத்தைத் துவக்கி வைத்து கருத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து  ஆலோசனைகளை வழங்கினார். 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார். பள்ளிக் கல்வித் துறையின் வேலூர் மாவட்ட வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் திருமதி. எஸ்.சாந்தி அவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறி கருத்தாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். மாவட்ட உதவித் திட்ட அலுவலரிடமும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் அவர்களிடமும்  கருத்தாளர்களின் வேலை அறிக்கையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது. 
இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன், கருத்தாளர் ஜமுனா ஆகியோர் இணைந்து அறிவியல் பரிசோதனைகளையும்  கணித செயல்பாட்டையும் செய்து காட்டி விளக்கினர். 
உபகரணங்கள் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது. 15 கருத்தாளர்களும் பயிற்சியில் பங்கு பெற்றனர்.
   எதிர்காலத் திட்டம் மற்றும் வேலை அறிக்கையின் தொகுப்பும் கருத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சா.குமரன் அவர்கள் பயிற்சியின் நிறைவு பெறும் வரை உடனிருந்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad