வேலூர் வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள இரா.பாலசுப்பிரமணியனனுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் வரவேற்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 September 2024

வேலூர் வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள இரா.பாலசுப்பிரமணியனனுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் வரவேற்பு!

வேலூர் வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள இரா.பாலசுப்பிரமணியனனுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் வரவேற்பு

வேலூர் செப்.25-

வேலூர் மாவட்டம் வருவாய் கோட்டத்தின் புதிய கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள அடிப்படையில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டக்கிளையின் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் பதவி வழி தலைவராக பொறுப்பேற்றுள்ள  இரா.பாலசுப்பிரமணியன் அவர்களை இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அறிவியல் குழந்தைகள் அதிசய மோதிரம் என்ற அறிவியல் நூல்களை வழங்கி வரவேற்றோம். 
இந்த நிகழ்விற்கு அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்றார்.  பொருளாளர் வி.பழனி செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அப்போது மாநில அளவில் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டி மூன்று ஆண்டுகள் தொடர்சியாக மாநில ஆளுநரிடமிருந்து விருதுகளை பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்தோம் 
வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்  பேசும் போது கூறியதாவது.  ரெட்கிராஸ் செயல்பாடுகள் பாராட்தலுக்குரியது இதிலும் குறிப்பாக காட்பாடி வட்ட ரெட்கிராஸ் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தேன் கடந்த பல ஆண்டுகளாக விருதுகள் பெற்றதை போல இவ்வாண்டு பெற வாழ்த்துகிறேன்.  மேலும் இரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற செயல்களில் முன்னனியாக இருந்து செயல்படுவது பாராட்டத்தக்கது என்றார்.  தொடர்ந்து சிறப்பாக செயல்பட அனைத்து உதவிகளும் வழங்குவதாக கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad