100 நாள் வேலையை முறையாக வழங்காததை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
குடியாத்தம்,அக் 24-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலையை முறையாக வழங்காததை கண்டித்து அக்ராவரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் துரை செல்வம் பிரேம்குமார் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் ஆகியோர்
தொடக்க உரையாற்றினர்.
முன்னாள் எம்எல்ஏ லதா கண்டன உரை ஆற்றினார். இதில் 100 நாள் வேலை நாட்களை குறைக்க கூடாது அரசு விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் 100 நாள் வேலை கணக்கு முடித்த மூன்று நாட்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு தனியாக துறைய உருவாக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தில் மகேஷ்பாபு அக்பர் வேலாயுதம் பழனி சூரவேல் பிச்சைமுத்து திருநாவுக்கரசு தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment