அகர்வால் கண் மருத்துவமனை கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 24 October 2024

அகர்வால் கண் மருத்துவமனை கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்!

குடியாத்தம் ,அக் 24-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி நோட்டரி சங்கம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில்
உயிர் அறக்கட்டளை, சென்னை அகர்வால் கண்  மருத்துவமனை. 
இணைந்து குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள பவனரிஷி திருக்கோயில் சமுதாய கூடத்தில் இலவச கண் அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் இன்று 24.10.2024 நடைபெற்றது.

கண் அறுவை சிகிச்சை முகாமில் நூற்றுக்கு (100) மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேல் சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேர் இலவச கண் அறுவை சிகிச்சை செய்ய சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லப்பட்டனர்.  குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் Rtn அருள் பாலாஜி அவர்கள் தலைமை தாங்கினார்.  சாதன தலைவர் Rtn கோபிநாத் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  முகாமிற்கு சிறப்பு விருந்தினராக உதவி ஆளுநர் Rtn அருணகிரி அவர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இம்முகாமில் ரோட்டரி உறுப்பினர்கள் Rtn. முரளி Rtn. மாணிக்கம் Rtn. பாலாஜி Rtn. இளங்கோ Rtn. படவேட்டான் Rtn. பிரதீப் Rtn. ஸ்வேதா Rtn. கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
சங்க செயலாளர் Rtn.அருள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad