குடியாததில் கொடி காத்த குமரன்
120-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
இன்று 04.10.2024 காலை 9 30 மணிக்கு
குடியேற்றம் நகராட்சி வளாகத்தில்
தேசிய கொடி காத்த திருப்பூர் குமரன்
அவர்களின் 120 வது பிறந்த நாள் விழா தியாகி குமரன் தொண்டு மன்றம் சார்பில் அதன் பொறுப்பாளர
முனைவர் வே. வினாயகமூர்த்தி
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தொண்டு மன்ற நிர்வாகிகள்எஸ்.சுரேஷ்,
ப.ஜீவானந்தம்,கோ.ஜெயவேலு
ஆகியோர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக
கலந்துக்கொண்ட குடியேற்றம் நகர மன்ற தலைவர், நகர திமுக செயலாளர் எஸ் சௌந்தர்ராசன்,
நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கொடிகாத்த குமரன் உருவப்படத்திற்கு
மாலையிட்டு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமார்,கவிஞர் முல்லைவாசன் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்
வி.இ.சிவக்குமார் நகர தலைவர் சி.சாந்தகுமார்,பகுத்தறி வாளர் கழக ஓவியர் சிவா,மாவட்ட திமுக துனைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ். பாண்டியன் கவிஞர்.சகுவரதன் நகர தி.மு.க.துணைச் செயலாளர்
ந. ஜம்புலிங்கம்,நகர கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு உறுப்பினர்கள்
யுவராஜ்,குபேந்திரன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக
கலந்துக்கொண்டனர்.இந்நிகழ்வில் மகாத்மா காந்தி ஜெயந்தி முன்னிட்டு வேலூரில் 6000 மாணவர்களை ஒருங்கிணைத்து சிலம்பம்,பறையிசை
ஒயிலாட்டம் ,பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை பெருமைப்படுத்தும் விதத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில்
பங்கேற்று குடியேற்றம் நகருக்கு பெருமை சேர்த்த கராத்தே மாஸ்டர்
பி.பொன்னரசு மற்றும் சிலம்பாட்டம் பிரிவில் பங்கேற்று உலகசாதனை சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு பெற்று வந்த மாணவர் V.V.யோகசரண் ஆகியோர்களை நகரமன்ற தலைவர் எஸ்.சௌந்தர்ராசன் அவர்கள் பாராட்டி
சால்வை அணிவித்து கௌரவித்தார்.
விழா முடிவில் தொண்டு மன்ற நிர்வாகி ஞானசேகரன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment