கோவில் சுற்று சுவர் கட்டுவதில் ஏற்பட்ட தகராறு சப் கலெக்டர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் அழைத்து பேச்சு வார்த்தை.
குடியாத்தம் அக.3-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பொண்ணம் பட்டியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அதே பகுதியை சேர்ந்த பெரியவர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். சில ஆண்டுக்களுக்கு முன்பு அதன் அருகே முனிஸ்வரன் கோயில் கட்டப்பட்டு மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முத்து மாரியம்மன் கோயில் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகளை அதன் நிர்வாகிகள் செய்து வந்தனர். இதற்கு முனீஸ்வரன் கோயிலை நிர்வகித்து வரும் தரப்பினர் இங்கு காம்பவுண்ட் சுவர் ஏற்றினால் சாமி கும்பிடுவதற்கு இடையூறு ஏற்படும் பொங்கல் வைக்குவதற்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி காம்பவுண்ட் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை எழுந்து வந்தது இதை அடுத்து காந்தி நகரில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் சப் கலெக்டர் சுபலட்சுமி தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி குழு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன்
நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி
கிழக்கு வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .கூட்டத்தில் கோயில் அமைந்துள்ள இடம் நீர்நிலை புறம்போக்கில் உள்ளதால் எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என கோர்ட்டு உத்தரவு உள்ளது எனவே கோவில் அருகே எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனக் கூறி அறிவுறுத்தி இரு தரப்பினரும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment