கூடநகரம் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாமில் சிறுசேமிப்பும், சிக்கனமும், முதலுதவி விழிப்புணர்வு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 October 2024

கூடநகரம் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாமில் சிறுசேமிப்பும், சிக்கனமும், முதலுதவி விழிப்புணர்வு

கூடநகரம் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாமில் சிறுசேமிப்பும், சிக்கனமும், முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி

குடியாத்தம் அக.4-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாம் கூடநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது இந்த முகாமில் சிறுசேமிப்பும் , சிக்கனமும் என்ற தலைப்பிலும் மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சியின் இந்தியன் ரெட்கிராஸ் சங்க காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல்விளக்கம் அளித்தார்.
ஏழுநாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் வி.நாராயணன் தலைமை தாங்கினார்.  திட்ட அலுவலர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
ஆங்கில முதுகலை ஆசிரியர் மோகன், தமிழாசிரியை சத்யா, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ்மோகன், கூடநகரம் ஊர் பிரமுகர் ஜி.கோபி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறுசேமிப்பும், சிககனமும் என்ற தலைப்பில்  மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல் விளக்கம் அளித்தார்.  
அப்போது அவர் அளித்த செயல் விளக்கம்.. முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, பாம்புக்கடி, விஷபூச்சிக்கடி, காயம் ஏற்பட்ட பகுதியயில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட நேரங்களில்  செய்யக் கூடிய முதலுதவி குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சேவைகளை பாராட்டி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.திருநாவுக்கரசு கைதறி ஆடை அணிவித்து பாராட்டினார்.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி வளாகம் தூய்மை, கோயில் வளாகம் தூய்மை, சாலை செப்பனிடுதல், தெருக்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.  மேலும மருத்துவமணை பார்வையிடுதல் பிளாஸ்டிக் ஒழிப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்களையும் மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad