தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 20 October 2024

தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

காட்பாடி, அக்20-

வேலூர் மாவட்டம் காட்பாடி 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பிருந்தாவன் பயணிகள் விரைவு ரயிலில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுப்பெட்டியில், மூட்டை மூட்டையாக இருந்ததை ஆய்வு செய்த போது அது தமிழக ரேசன் அரிசி என்றும் அது கர்நாடகவுக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதனை அடுத்து தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 25 மூட்டைகளில் இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவரை பிடித்த காட்பாடி ரயில்வே காவல்துறையினர் குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர். 

காட்பாடி தாலுக்கா செய்தியாளர் கே  எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad