வேலூர் ,அக்19-
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வடக்கு மண்டல அளவலான பயிற்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (19.10.2024) வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பெ. அமுதா அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு பழனிவேல் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
வேலூர் மாவட்டச் செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அவர்கள் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் கல்வியில் அறிவியல் இயக்கம் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் எஸ்.டி பாலகிருஷ்ணன் அவர்களும், "அறிவியலும் சமூகமும்" என்ற தலைப்பில் அறிவியல் வெளியீடு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். சுப்பிரமணி அவர்களும், "குழந்தைகள் அறிவியல் மாநாடு" என்ற தலைப்பில் மாவட்டத் துணைத் தலைவர் கே. விஸ்வநாதன் அவர்களும், துளிர் திறனறிதல் தேர்வு குறித்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமதி ஏ. வி.அம்பிகா அவர்களும் உரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் திருமிகு கே. பூபாலன், முருகன், பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment