மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் மற்றும் 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற இளம் பெண்
வேலூர் ,அக் 28-
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் (அக்டோபர் 28) நடைபெறும் நேரத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
உடனடியாக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்
இதில் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி குருநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கல்பனா(வயது 35) தனது 2 மகள்களுடன் மனு அளிக்க வந்தார். அப்போது அவர்கள் 3 பேரும் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment