நீர்நிலை மற்றும் கிராம பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி முதற்கட்டமாக 20 ஆயிரம் பண விதைகள் நடவு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 October 2024

நீர்நிலை மற்றும் கிராம பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி முதற்கட்டமாக 20 ஆயிரம் பண விதைகள் நடவு!

குடியாத்தம் அக.4-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நீர்நிலை மற்றும் கிராம பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி முதற்கட்டமாக 20 ஆயிரம் பண விதைகள் நடவு குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி கரையோரம் சுமார் 20000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி சடையப்பன் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் விஜியன்
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி கலந்துகொண்டு பனை விதை நடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள் இதில் மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்திரன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன் ஜீவா கிராம நிர்வாக அலுவலர்கள் சபரிமலை ஜீவரத்தினம் ஊராட்சி செயலாளர்கள் நிர்மல் பாலமுருகன் பரந்தாமன் மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad