குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 October 2024

குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

குடியாத்தம் அக்.5-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா கௌதம் பேட்டையில் உள்ள அம்பேத்கார் திருமண மண்டபத்தில் போலீசார் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார் போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ் குமார் முன்னிலை வகித்தார்
இதில் சிறப்பு அழைப்பாளராக துணை காவல் கண்காணிப்பாளர் 
( பொ ) இருதயராஜ் குற்ற செயல்களை குறித்து எடுத்துரைத்தார்

போக்குவரத்து மற்றும் குற்ற செயல்களை குறித்து ஆய்வாளர் முகேஷ் குமார்
உதவி ஆய்வாளர் தாரணி வருங்கால இளைஞர்கள் போதை பொருளான குட்கா கஞ்சா போன்ற போதை மாத்திரை மூலம் ஊசி போட்டு இளைஞர்கள் அழிந்து வருகிறார்கள். இது போன்ற செயலை செயல்படாமல் தடுக்க வேண்டும் 18 வயதிற்கு மேல் இரு சக்கர வாகனம் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என பல ஆலோசனைகள் வழங்கினார்
இந்நிகழ்ச்சி கஸ்பா கௌதப்பேட்டை ஊர் நாட்டார்மை டாக்டர் 
கெண்னடி நகர மன்ற உறுப்பினர்கள் கற்பகம் மூர்த்தி மேகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்

இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும்  7 வது வாா்டு மற்றும் 9-வாா்டு பொது மக்கள் கலந்து கொண்டனா்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad