தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகள் அறிவியல் மாநாடு 2024 வடக்கு மண்டல அளவிலான பயிற்சி பட்டறை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 October 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகள் அறிவியல் மாநாடு 2024 வடக்கு மண்டல அளவிலான பயிற்சி பட்டறை.

வேலூர் அக.3-

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
குழந்தைகள் அறிவியல் மாநாடு 2024
வடக்கு மண்டல அளவிலான பயிற்சி பட்டறை இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான கருத்தாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட  பங்கேற்புடன் வடக்கு மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான கருத்தாளர்கள் பயிற்சி, கருத்தரங்கம் இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் ஸ்டார் பள்ளியில் நடைபெற்றது.  

தமிழ்நாடு அறிவியல் இயக்க - அறிவியல் வெளியீடுகள் உப குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சா.சுப்ரமணி தலைமை தாங்கினார்.
முன்னதாக மாவட்ட பொருளார் பி.ஜெயசுதா வரவேற்றார். 
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி.குணசேகரன், வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் இராணிப்பேட்டை டாக்டர் அ.கலைநேசன், கிருஷ்ணகிரி  சந்தோஷ், சென்னை  அரவிந்தன், திருவண்ணாமலை  இ.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சி கருத்தரங்க கையேட்டினை மாநில கருத்தாளர்கள், பேராசிரியர்கள் கே.காத்தவராயன், கே.வித்யா, மலைசெல்வி, ஜாப் கோபிநாத் ஆகியோர்    வெளியிட்டு பயிற்சி அளித்தனர். இச் செயல்பாட்டின் மூலம் 10  வயது முதல்18  வயதிற்குட்பட்ட  குழந்தைகள் அறிவியல்  ஆய்வு முறைகளை  பயன்படுத்தி,  தங்கள் பகுதியில் காணப்படுகிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கண்டறிந்து, ஆய்வு   செய்து,  அதற்கான  தீர்வுகளை, முடிவுகளை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், பள்ளி சாராக்கல்வி குழந்தைகள், படிப்பை இடையில் நின்ற குழந்தைகளும் துளிர் இல்ல குழந்தைகளும் பங்கேற்கலாம்.

  மேலும் இச் செயல்பாட்டின் நோக்கமாக குழந்தைகள் மத்தியில் குழுச் செயல்பாடு, புதிய கண்டுபிடிப்பு, கள ஆய்வு, செயல்பாடுகள்,  தகவல்களை கொண்டு சமூக பிரச்சனைகளுக்கும், அன்றாட வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு அறிவியல் முறைகள் மூலம் தீர்வு கண்டுபிடித்தல் ஆகும். இந்த வருடம் மாநில அளவில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக 2024ன் கருப்பொருள் நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை"  என்பதே. இந்த பொருள் பற்றி மாணவர்கள் சுமார் மூன்று மாத காலம் குழுவாக ஆய்வு செய்ய வேண்டும். ஒரு குழுவில்  2 மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.  
வடக்கு மண்டல பயிற்சி கருத்தரங்கில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளுர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கருத்தாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad