காக்கா தோப்பில் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புதிய  மாணவர்களின்  சேர்க்கை  துவக்கம்  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 12 October 2024

காக்கா தோப்பில் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புதிய  மாணவர்களின்  சேர்க்கை  துவக்கம் 

காக்கா தோப்பில் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புதிய  மாணவர்களின்  சேர்க்கை  துவக்கம் 

குடியாத்தம்,அக்12-

 . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பில் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு புதிய மாணவர்களின் சேர்க்கை துவக்கம் நடைபெற்றது. 
இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் p . சௌந்தரராஜன்  அவர்கள் தலைமை தாங்கி இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும்  வேலூர்  மாவட்ட சுற்றுப்பகுதியில்  உள்ள  கிராமப்புற  மாணவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின்  ஜவாதுமலை மாணவர்களின்   மருத்துவ படிப்பு கனவை நினைவாக்கியத்தில் மிகவும் பெருமையடைகிறேன் என்று சிறப்புரை ஆற்றினார். முதன்மை அழைப்பாளராக கலந்துக்கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தின்  ஊரக துறை செயலாளர்   டாக்டர் k . அர்ஜுனன்  அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து மாணவர்களின் மருத்துவ படிப்பின்  முக்கியத்துவத்தையும் சேவையும் . எடுத்து கூறினார் . சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட சென்னை ESIC  மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின்  துணை இயக்குனர் டாக்டர் s . கருப்பசாமி அவர்கள் இயற்கை மருத்துவ படிப்பின் முக்கிய துவத்தை எடுத்து கூறினார் .   நடிகர் செந்தில் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்கள் தங்களின் படிப்பை விருப்பத்தோடு படித்து மக்களுக்கு சேவை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குமரி  அனந்தன் அவர்கள் , அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் ஆ கென்னடி ,அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் k . தங்கராஜ்  மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k . குமரவேல்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவி ஓனிஷா   அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.அத்தி மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி செந்திகுமார் , மேல்மூட்டுக்கூர் பஞ்சாயத்து தலைவர் சுந்தர் அவர்கள் , அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் 5 ஆம் ஆண்டு  புதிய மாணவ மாணவிகள் . அத்தி கல்லூரியின்  மருத்துவர்கள் , பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துக்கொண்டனர் .


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad