காந்திநகர் துளிர் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை விழா
காட்பாடி ,அக12-
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.
நிகழ்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக அறங்காவலர் வி.பழனி வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமையாசிரியர் த.கனகா முன்னிலை வகித்தார். காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். புதியதாக மாணவர்களை சேர்க்க வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மடியில் அமரவைத்து அசிரியில் எழுத்துக்களை எழுதி பழகினர். பின்னர் மாணவர்களை பள்ளியில் சேர்க்கை செய்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வழிகாட்தல்களுடன் நடைபெற்றுவரும் துளிர் பள்ளியில் கற்பது கற்கண்டே என்ற கொள்கையும் மாணவர்கள் புரிந்து கொண்டு கல்வி பெறசெய்யும் வகையில் கல்வி போதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் சே.சித்ரா, தனலட்சுமி, பாரதி, மலர்கொடி ஆகியோர் உடனிருந்தனர். மாணவர்கள், பெற்றோர்களுக்கு இனிப்பும் பொரி, கடலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment