காட்பாடி அக.6-
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஏழுநாட்கள் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம் நிறைவு நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் கோ.சரளா தலைமை தாங்கினார். உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் மோ.அன்னபூரணி வரவேற்று பேசினார்.
முதுகலை ஆசிரியர்கள் எஸ்.வெங்கடேசன், பிரேமலதா, பொருளாதார ஆசிரியர் எம்.கலைவாணி, சிவலட்சுமி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தலைமைப் பண்பு மற்றும் வெற்றிக்கு வழி குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல் விளக்கம் அளித்தார். காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சேவைகளை பாராட்டி உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து சால்வை அணிவித்ததார்.
ஏழு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் யோகா, உடற்பற்சி, சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு சட்ட கல்வி ஓழுக்கம் மற்றும் நற்பண்புகள், முதலுதவி மற்றும் சுற்றுபுற தூய்மை, மண் பாதுகாப்பு, மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் தோட்டக்கலை விழிப்புணர்வு, உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வு என பல்வேறு கருதரங்க பயிற்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பள்ளி வளாகம் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட தொடர்பு அலுவலர் ஜி.சாமிப்பிள்ளை ஜான்சன், கல்வி உலகம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பி.சியாமளா, உதவி ஆய்வாளர் எ.மேரிகுளோரியா, விளையாட்டு துறை பயிற்சியாளர் எம்.கே.சூர்யா, ரயில்வே சாரண இயக்க கே.கயல்விழி டிஜிடல் தொழில்நுட்பம் குறித்து வனிதாரவி, சாய் கார்த்தி, போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, நிதிலேஷ்குமார், எ.கே.சரவணகுமார், நலம் மருத்துவமனை பொது நல மருத்துவர் சீதாலட்சுமி திறன் வளர்ப்பு குறித்து எம்.சிவசங்கரி, சிலம்ப பயிற்சியாளர் எஸ்.ஆர்யா ஆகியோர் ஒவ்வொரு நாளும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment