காட்பாடி ஆண்கள் பள்ளியின் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா
காட்பாடி அக.6-
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாம் காட்பாடி வடக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஏழுநாட்கள் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் என்.ஜெய்சங்கர் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.அன்பு முன்னிலை வகித்தார்.
மாவட்ட தொடர்பு அலுவலர் ஜி.சாமிபிள்ளை ஜான்சன் நாட்டு நலப்பணி திட்டம் குறித்து விளக்கி பேசினார். தலைமைப் பண்பு மற்றும் வெற்றிக்கு வழி குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல் விளக்கம் அளித்தார். காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சேவைகளை பாராட்டி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை சால்வை அணிவித்து பாராட்டினார்.
ஏழு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் யோகா, உடற்பற்சி, சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு சட்ட கல்வி ஓபக்கம் மற்றும் நற்பண்புகள், முதலுதவி மற்றும் சுற்றுபுற தூய்மை, மண் பாதுகாப்பு, மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் தோட்டக்கலை விழிப்புணர்வு, உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வு என பல்வேறு கருதரங்க பயிற்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகம் தூய்மை, கோயில் வளாகம் தூய்மை, சாலை செப்பனிடுதல், தெருக்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மழை நீர் சேகரிப்பு மற்றும் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர், வட்டார கல்வி அலுவலர் சரவணன், நடுநிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியை சே.ஷீலா உதவி திட்ட அலுவலர் ஆர்.லலித்குமார், உதவி தலைமையாசிரியர்கள் ச.புவியரசன், ஆர்.கவிதா, ஆசிரியர்கள் கே.ஜெ.குணசேகரன், ஜி.டி.பாபு, எஸ்.பாலசுப்பிரமணியம், டி.கோவிந்தராஜ், சரஸ்வதி, ஜமுனாராணி, ரவிக்குமார், கே.உமா, பி.குமார், கே.ரமேஷ்குமார், எல்.கௌரி, எ.டி.தீபா, நவின் குமார், ஆர்.கல்பனா மிராக்கலின், அஜித்குமார், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஒவ்வொரு நாளும் பங்கேற்று வாழ்த்தி பேசினர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment