மாற்றுத்திறனாளிகள் விதவைகள் திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்
குடியாத்தம் அக.6-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் சலவை தொழிலாளருக்கு அரிசி பருப்பு சேமியா ரவை போன்ற நிவாரண பொருட்கள் 82 ஆவது மாதமாக 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
பெருமாள் வரவேற்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் சி கண்ணன் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் செ கு வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஏழை எளியவர்களுக்கு நிவாரண தொகுப்பு பைகள் வழங்கினார்கள்
இதில் மாற்றுத்திறனாளிகள் அனுமந்த் சசிகலா சுமித்ரா கார்த்திக் சண்முகம் முருகன் பானுப்பிரியா உஷா விஜயா உள்பட 100 நபர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும்நிவாரண பொருட்கள் புடவைகள் இனிப்புகள் வழங்கப்பட்டது
இறுதியில் அகிலாண்டேஸ்வரி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment