திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற  ஆசிரியை எம்.கலைவாணிக்கு பாராட்டு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 October 2024

திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற  ஆசிரியை எம்.கலைவாணிக்கு பாராட்டு

திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற  ஆசிரியை எம்.கலைவாணிக்கு பாராட்டு

காட்பாடி, அக்15-
வேலூர்  மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 19வது பட்டமளிப்பு விழாவில் உயர்
கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், துணைவேந்தர் ஆறுமுகம் முன்னிலையில் ஆளுநர் ஆன்.என்.ரவி அவர்கள் பங்கேற்று  முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவியும் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஆசிரியை எம்.கலைவாணி உள்ளிட்ட மாணவர்களுக்கு  முனைவர் பட்டம் வழங்கினார். முனைவர் பட்டம் பெற்றுள்ள எம்.கலைவாணி அவர்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர் கோ.சரளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.சதீஸ்குமார் எ தாமஸ், வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் சித்ராமகேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.கே.சூர்யா,  ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பிரனர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்த மாணவி காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவி.  மேலும் குடியாத்தம் திருமகள் ஆலை கல்லூரியில் பி.எ. பொருளாதாரம் படிப்பும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.ஏ.பொருளாளதாரம் படிப்பையையும் முடித்தார்.
திருவண்ணாமலை அருணாசலா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பி.எட் பட்டமும் கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் எம்.எட் பட்டமும்  சென்னை பல்கலைகழகத்தில்  நூலக அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு இளங்கலைபட்டம்  பெற்றார். திருநெல்வேலி மனேன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நூலுக அவிவியல் முதுகலை பட்டம் பெற்றார். 
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் எம்.பில். இளம் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 
திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் வேலூர் ஊரிசு கல்லூரியில் ஆய்வில் நிறைஞர் முனைவர் பட்டம் பொருளாதாரம் துறையில் நெல் உற்பத்தி என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்ட இவர் நேற்று முன்தினம் மாநில ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்களிடமிருந்து பி.எச்.டி முனைவர் பட்டம் பெற்றார்.  இவர் தடகள வீராங்கனை சங்கத்தின் மகளிர் பிரிவு செயலாளராகவும் பணி செய்து வருகிறார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad