அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா காட்பாடி அரசு பள்ளி ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் நல்லாசிரியர் விருது இணை இயக்குநர் வை.குமார் வழங்கி பாராட்டு
காட்பாடி ,அக்14-
வேலூர் மாநகரம், காட்பாடி அரசு பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 324 எச் மாவட்டங்கள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா வாணியம்பாடி வாணி கல்வியியல் கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் என்.கருணாநிதி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு செயலர் தமீம்அகமது வரவேற்று பேசினார்.பன்னாட்டு இயக்குநர் எஸ்.மகேஷ், மாவட்ட ஆளுநர் எஸ்.சுரேண், 324 கூட்டு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் பாராட்டி பேசினர்.
ஜோலார்பேட்டை தொகுதியின் சட்டமைன்ற உறுப்பினரும் வாணிகல்வி அறக்கட்டளையின் தலைவருமான க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.செ.வில்வநாதன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வாணி கல்வி அறக்கட்டளையின் செயலர் டி.கந்தசாமி, என்.டி.பாஸ்கரன், பூர்ணசந்திரன், டி.நித்யகுமார் முன்னாள் மாவட்ட ஆளுநர் இரத்தின நடராஜன், பி.சின்னபையன், பி.ஆர்.தேவராஜன், வரவேற்புக்குழு தலைவர் எம்.ஆர்.காந்திராஜ் நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கனிவுரையாற்றினர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இணை இயக்குநர் வை.குமார் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.. ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்கள் உயர்வதால் பொறாமை பட மாட்டார்கள். மாணவர்கள் தங்கள் வாழ்வில் உயர்வினை பெறும் போது மகிழ்ச்சி அடைந்து பாராட்டும் குணம் உள்ளவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியர் தின விழாவில் நான் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த மேடையில் நான் பேசுவதற்கு என்னை தயார் படுத்திய எனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் முதல் அனைத்து அசிரியர்களின் வழிகாட்டுதலும், ஊக்குவித்தலும் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. தமிழ்நாடு அரசு வருடம் தோறும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இது போன்ற சமூக சேவை சங்கங்களும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவிப்பது பாராட்டதக்கது என்றார். இவ்விழாவில் வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பணிநிறைவு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், கே.வி.குப்பம் எஸ்.கணேஷ், சித்ராவள்ளி, அமிர்த் கௌரி, டி.புவனேஸ்வரி, திருப்பத்தூர் சி.ஜெயக்குமார், ஆம்பூர் சி.குணசேகரன், ரவிச்சந்திரன், ரவிவர்மன், உள்ளிட்ட வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளுர், மாவட்டங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளையும், பொன்னாடையும் போர்த்தி திருக்குறள் நூல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment