குடியாத்தம் ,அக 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
செதுக்கரை கிராமம் புல எண் 157 பாலாஜி வகையறாக்கு சொந்தமான நிலத்தில் மரம் சற்று முன் முறிந்து கீழே விழுந்துள்ளது அந்த மரத்தின் பக்கத்தில் சென்று கொண்டிருந்த மின் கம்பிகள் அருந்து கீழே விழுந்துள்ளது மேற்படி மரத்தில் கிளைகளை மேய்வதற்காக ஏகாம்பரம் தந்தை பெயர் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடுகள் மேற்படி மரத்தின் இலைகளை மேய்வதற்காக வந்து மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்து விட்டன
தகவல் கிடைத்தவுடன் மின்சாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார தொடர்புகளை துண்டித்து உள்ளனர்
மேற்படியான மரம் சற்று முன் பெய்த மழையினால் மரம் கீழே முறிந்து விழுந்துள்ளது என்று மின்சார ஊழியர்கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment