குடியரசு தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற அரசு ஆசிரியர் மக்கள் பேரவை சார்பாக பாராட்டு விழா
குடியாத்தம், அக்-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி நகராட்சி அரசு பள்ளியின் ஆசிரியர் ஆர் கோபிநாத் அவர்களுக்கு சிறந்த நல்லாசிரியர் விருது இந்திய குடியரசுத் தலைவர் அவர்களிடம் பெறப்பட்டது.
மேதகு இந்திய குடியரசு தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஆர்.கோபிநாத் அவர்களை பாராட்டி பணி மேலும் சிறக்கவும் இதன் மூலமாக குடியாத்தம் மண்ணிற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் கோபிநாத்த அவர்களுக்கு மக்கள் பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் பேரவை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் பேராயர் டாக்டர் பி நோவா முன்னிலை வகித்தார்
மக்கள் பேரவை பொருளாளர் மகேந்திரன் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கே எம் ஜி கல்வி குழுமங்களின் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன்
வழக்கறிஞர் கே எம் பூபதி விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற செயலாளர் செல்ல பாண்டியன்
அதிமுக அமைப்பு செயலாளர் வி ராமு மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி
இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் தலித் குமார்
முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் குடியாத்தம் நகர முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவல் இ நித்தியானந்தம் Ex m c
நகர மன்ற உறுப்பினர் மனோஜ்
முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் மணவாளன் கம்பன் குடியாத்தம் ஒன்றிய துணை செயலாளர் செ கு வெங்கடேசன் குடியாத்தம் எஸ் குமார் டி துரைராஜ்
டி பாஸ்கர் தனஜெயன் நவீன் உட்பட சமூக ஆர்வலர்கள் ஆசிரிய பெருமக்கள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு ஆசிரியர் கோபிநாத் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment