ஆன்லைன் மோசடி உரிய புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 October 2024

ஆன்லைன் மோசடி உரிய புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

ஆன்லைன் மோசடி உரிய புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 

குடியாத்தம் அக,7-

வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையம் கடந்த 01.03.2021 முதல் துவங்கப்பட்டு மாவட்ட காவல் அலுகலகத்தில் செயல்பட்டு வருகிறது. இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் குற்ற புகார்களை மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கு செல்போனில் HDFC Customer care லிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றி சுமார் ரூ.30,000/- பணத்தை அபகரித்துள்ளனர் அதே மாதத்தில் காட்பாடி பகுதியை சேர்ந்த பிரதிப் என்பவருக்கு Reward point redeem செய்ய வந்த செல்போன் மெசேஜை நம்பி அந்த லிங்கை கிளிக் செய்தபோது வங்கி கணக்கிலிருந்து ரூ.71,290/- பணம் அபரிகரித்துள்ளனர். கடந்த மே மாதம் பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கு செல்போனில் லோன் கொடுப்பது சம்மந்தமாக பேசி பின்னர் அவரிடமிருந்து Document fees, GST போன்ற காரணங்களை சொல்லி சுமார் ரூ.94,000/- பணத்தை அபகரித்துள்ளனர். அதே மாதத்தில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஆன்லைன் Investment என்று கூறி வாட்ஸ் ஆப் வாயிலாக தொடர்பு கொண்டவர்கள் ரூ.15,000/- பணத்தை அபகரித்துள்ளனர் மேற்படி ஆன்லைன் மோசடி புகார்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு ரூ.2,08,840/- பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட புகார்தாரர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. மதிவாணன் அவர்களால் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் R. ரஜினி குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் A. சதிஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் 
இன்ப ராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad