உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வந்ததாக பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்த காவல்துறை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 October 2024

உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வந்ததாக பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்த காவல்துறை!

உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வந்ததாக பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

குடியாத்தம் , அக்21- 

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்டோபர 22 குடியாத்தம் புதுப்பேட்டை கோட்ட சுப்பையா தெரு பகுதியில் லைசன்ஸ் பெறாமல் உரிய ஜிஎஸ்டி பின் இல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக பட்டாசு இறக்கப்படுவதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி குடியாத்தம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் வீராசாமி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஹரி, உளவுத்துறை சப் இன்ஸ்பெக்டர் சேகர், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு இறக்க வந்த வேன் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனம் என தெரிய வந்தது மேலும் பட்டாசு பாக்ஸ்க்கு  பில்கள் இருப்பதாகவும் குடியாத்தம்  மற்றும் சுற்றியுள்ள  பத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் புக்கிங் செய்திருந்ததாகவும்,  அவர்களுக்கு டெலிவரி கொடுப்பதற்காக  வந்தது தெரிய வந்தது பின்னர் போலீசார் பட்டாசு பெட்டிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு மினி வேன் உடன் கொண்டு சென்றனர் பின்னர் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி விசாரணை செய்து பட்டாசு பெட்டிகளை மீண்டும்
உரியவர்களிடமே ஒப்படைத்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad