பருவ மழை இடர்பாடுகளில் ஏற்படும் ஆபத்து மற்றும் தீயினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முறை பற்றிய துண்டறிக்கை வெளியீடு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 October 2024

பருவ மழை இடர்பாடுகளில் ஏற்படும் ஆபத்து மற்றும் தீயினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முறை பற்றிய துண்டறிக்கை வெளியீடு!

பருவமழை இடர்பாடுகளில் பாதுகாப்பு முறைகள் மற்றும் தீ பரவுதலை தடுக்கும் முறைகள் துண்டறிக்கை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வேலூர் மாவட்ட அலுவலர் சி.லட்சுமிநாராயணன் வெளியீடு

வேலூர் ,அக்21-

வேலூர் மாவட்டம் மாவட்ட அலுவலர் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இதனால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நடைபெறும் தீ விபத்துகளின் போது தீ பரவுதலை தடுக்கும் முறைகள் குறித்தும் டாக்டர் அ.மு.இக்ராம் அறக்கட்டளையும் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் அமைப்பும் இணைந்து வெளியிட்ட துண்டறிக்கையினை இன்று 21.10.2024 பிற்பகல் 12 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வேலூர் மாவட்ட அலுவலர் சி.லட்சுமிநாராயணன் வெளியிட்டார்.

இதற்கான நிகழ்வு  வேலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை மார்ஷல்  டாக்டர் அ.மு.இக்ராம் தலைமை தாங்கினார்.  முன்னதாக இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வேலூர் மாவட்ட உதவி அலுவலர்கள் டி.முகுந்தன், எஸ்.பழனி, அவை துணைத்தலைவர் குமரன் ஆர்.சீனிவாசன், பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பருவமழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அடிப்படை உயிர் காக்கும் வழிமுறைகள், ஓர் உயிரை காப்பாற்ற நீங்கள் மருத்துவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  கற்றுக்கொடு காப்பாற்று என்ற விவர துண்டறிக்கையும்  மேலும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நடைபெறும் தீவிபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடைமுறைகள் குறித்து வீடுகளில் புகை அறிவிப்பான் பொருத்துதல், தீயிலிருந்து தப்பிக்க திட்டமிடுதல், புகை பிடிப்போர் மிக மிக கவனம் தேவை, கவனத்துடன் சமைத்தல், வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது போதிய இடைவெளி பராமரிக்க வேண்டும், தீப்பெட்டியும் லைட்டரும் குழந்தைகளின் கையில் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், தீக்காயம் ஏற்பட்டார் காயத்தின் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும், மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும், ஆடையில் தீ பிடித்துக்கொண்டார் ஒடக்கூடாது என்ற விவரங்களை கொண்ட துண்டறிக்கையினை மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் வேலூர் மாவட்ட அலவலர் சி.லட்சுமிநாராயணன்  வெளியிட  வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை மார்ஷல்  டாக்டர் அ.மு.இக்ராம் பெற்றுக்கொண்டார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad