சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில் மையத்தின் சார்பில் கடன் வசதியாக்கள் முகாம்!  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 October 2024

சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில் மையத்தின் சார்பில் கடன் வசதியாக்கள் முகாம்! 

சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில் மையத்தின் சார்பில் கடன் வசதியாக்கள் முகாம்.

வேலூர்,அக் 22-

வேலூர் மாவட்டம் சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் சார்பில் வேலூர் மாவட்ட தொழில்மையத்தின்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கடன் வசதியாக்கல் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.10.2024) தொடங்கி வைத்தவர் 

இதில் 33தொழில்
முனைவோருக்கும், 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் தொழில்புரிய ஏதுவாக ரூ.8.24 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  இரா. இரமணி, மண்டல மேலாளர்கள்  பல்லேம் பத்மபாபு கௌடு (எஸ்.பி.ஐ வங்கி), திரு. ஸ்ரீ ராமச்சந்திர பாபு (இந்தியன் வங்கி), உதவி பொது மேலாளர் (கனரா வங்கி) மாதவ் குமார் மத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், மகளிர் திட்ட இயக்குநர் உ. நாகராஜன், துணை பதிவாளர்  சுரேஷ்குப்தா, திட்ட உதவி வல்லுநர் மணிகண்டன், வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர்கள் சங்கம்   எஸ். நாகராஜன, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (ஆக்டிவ்)  உதயகுமார், உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) சா. சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad