நீர்வளத்துறை அமைச்சர் மண்ணிலே குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம பொதுமக்கள்.  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 October 2024

நீர்வளத்துறை அமைச்சர் மண்ணிலே குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம பொதுமக்கள். 

நீர்வளத்துறை அமைச்சர் மண்ணிலே குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம பொதுமக்கள். 

கே வி குப்பம், அக்22-

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த பசுமத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள் பசுமாத்தூர் ஊராட்சியில் பெரிய குடிநீர் குழாய் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த சிண்டேக்ஸ் குழாயின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அருகில் இருந்த பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. பொதுமக்கள் ஆப்ரேட்டரிடம் கேட்டதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  சொன்னால் தான் தண்ணீர் விடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் பஞ்சாயத்து செயலர் அவர்கள் இதோ கொடுத்து விடுகிறேன் இன்று நாளை என்று அலைகழித்து வருகிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை செய்து துறை ரீதியிலான நடைவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனசு வைத்தால் தான் உங்களுக்கு தண்ணி என்று கூறி வருகின்றனர்.ஊராட்சி மன்ற தலைவர்களை நம்பி எந்த பயனும் இல்லை உடனடியாக அரசு அதிகாரிகள் தலையிட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீரை உடனடியாக வழங்குமாறு சமூக ஆர்வலர்களின் சார்பிலும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பிலும் கோரிக்கை வைத்தனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad