குடிநீர் பயன்பாட்டுக்காக முன்னோர்கள் பயன்படுத்திய குளங்களை தூர்வாரி பராமரிக்க தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்!
அணைக்கட்டு,அக்21-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பொய்கை ஊராட்சி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி இந்த இரண்டு ஊர்களுக்கு இடையே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த குளம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு குடிநீர் எடுப்பதற்கு மட்டுமே பயன் பெற்று வந்த குளம் தற்போது 25 வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் இந்த குலத்தில் பொய்கை மற்றும் சத்தியமங்கலம் கிராமங்களில் நடைபெறும் கால்நடை சந்தை அதாவது ஆடு மாடு கோழி ஆகியவற்றை விற்பது வாங்குவது எனமிகவும் பெயர் பெற்ற சந்தை பொய்கை சந்தை இது சந்தையில் வரும் கால்நடைகள் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்த குளங்களில் மாடுகளை கழுவுதல் துணிகள் துவைத்தல் என பயன்படுத்தி வந்த குளம் சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் இருந்து அந்த குளங்களில் கழிவு நீர் கலப்பது கால்வாய் இணைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத குளம் துர்நாற்றமும் வீசுவது மட்டும் அல்லாமல் பல்வேறு விஷப்பூச்சி பூச்சிகள் பாம்பு பூரான் போன்று விஷ பூச்சிகள் வாழ்ந்து வருகின்றனர். குளங்களை சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்து யாருக்குமே பயன்பாட்டில் இல்லாத குளங்களில் இருந்து நோய் தொற்று வரும் என அச்சத்தில் உள்ள பொதுமக்கள் தமிழக அரசும் நீர்வளத்துறை அமைச்சர் வேலூர் மாவட்ட ஆட்சியரும் கிராம சுகாதாரத்துறை அலுவலர்களும் இந்த இரண்டு கிராமத்திற்கும் நீர் வளமாக அமையும் குளங்களை தூர்வாரி மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சீர் அமைத்து தரும்படி பொதுமக்கள் சார்பாகவும் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் குறிப்பாக இதுபோன்று குளங்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளன அவைகளின் நிலைமையும் இதே கதி தான் ஆகையால் தமிழக முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் நீர்வளத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் வட்டாட்சியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தருமாறு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment