மாநில அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மற்றும் பல்வேறு தீர்மானம் கூட்டம்.
அணைக்கட்டு அக்.6-
வேலூர் மாவட்டம்
கோகுல மக்கள்
கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று
பள்ளிகொண்டா லட்சுமி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி பள்ளி கொண்டா நகர செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் எம் வி. சேகர் சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசு உடனடியாக நடத்த வேண்டும் அணைக்கட்டு பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்
அணைக்கட்டு வட்டம் பிச்சாநத்தம் ஏரி தூர்வாரி வேண்டும் ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும் பள்ளி கொண்டா முதல் கட்டுப்புடி சாலை தார்சாலை அமைக்க கோருதல் வேலூர் மாவட்டத்தில் கால் நடை மருத்துவக்கல்லூரி அமைக்க கோருதல் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் சசிக்குமார் ஜிஜி செல்வம் வடக்கு மண்டல செயலாளர் மணிகண்டன் நிர்வாகிகள் நந்தகுமார் கோபி ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சந்தோஷ்குமார்
No comments:
Post a Comment