வேலூர் ,அக்-
வேலூர் மாவட்டம் பேரிப்பேட்டை விஸ்வகர்ம ஸ்ரீ வீரபிரம்மங்கார் மடத்தில் 55 ஆம் ஆண்டு நவராத்திரி விழா 4ஆம் நாள் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஶ்ரீ சாந்தநாயகி சமேத ஶ்ரீ சந்திர சேகர சுவாமிகளுக்கும், ஶ்ரீ கோவிந்தம்மாள் சமேத ஶ்ரீ வீரப் பிரம்மங்கார் சுவாமிகளுக்கும் மகா அபிஷேகம் செய்து ஆராதானைகள் நடைபெற்றன. 4ஆம் நாள் உற்சவத்தில் அருள்மிகு ஶ்ரீவிசாலாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
விஸ்வகர்ம ஜெகத்குரு சீனந்தல் மடாயத்தின் 65வது குருபீடாதிபதி சிவராஜ ஞானாச்சரிய குருஸ்வாமிகள் அருளாசியுடன் தொடங்கியது.
விழாவிற்கு நவராத்திரி உற்சவ விழா குழு தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். பொருளாளர் எல்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். செ.நா.குப்புசாமி ஆச்சாரி மற்றும் சகோதரர்கள், க.சக்ரவர்த்தி ஆச்சாரி மற்றும் சகோதரர்கள், ஆர்.ரமேஷ், கு.சங்கரவடிவேலு, எஸ்.ஈஸ்வரன், ஜெ.மணிஎழிலன், தாமோதரன் செல்வி, வி.கருணாகரன் மற்றும் சகோதரர்கள், வி.பார்த்திபன் மற்றும் சகோதரர்கள், டி.கிருண்ணன் ஆச்சாரி ஆகியோர் உபயதாரர்களாக பங்கேற்று சிறப்பித்தனர். 5ஆம் நாள் ஶ்ரீ மகிஷாசூரமர்த்தினி, 6ஆம் நாள் ஶ்ரீமீனாட்சி, 7ஆம் நாள்
ஶ்ரீஉமாமகேஸ்வரி, 8ஆம் நாள் ஶ்ரீசிவலிங்க பூஜை (மாவடி சேவை) 9ஆம் நாள் ஶ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரம் நடைபெறுகிறது. 10ஆம் நாள் 12.10.2024 அன்று விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவைர் சி.தேஜோமூர்த்தி செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் எல்.பன்னீர்செல்வம் உறுப்பினர்கள் எஸ்.லோகநாதன், பி.செந்தில்வேலன், சு.சோமாஸ்கந்தன் ஆச்சாரி, எம்.நாகராஜ்,
தி.சு.சக்ரீஸ்வரன் ஆச்சாரி ஆகியோர் செய்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.பாக்யராஜ்
No comments:
Post a Comment