பிரம்மஞான சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் தேர்வு
காட்பாடி அக்,24-
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் அமைந்துள்ள பிரம்மஞான சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வி.எ.நாகப்பன் தலைமை தாங்கினார்.
உண்மையைத்தவிர உயர் சமயம் வேறு இல்லை என்ற டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் அவர்களினை கருத்துகளை எடுத்துரைத்து கடந்த ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளை சமர்பித்து தலைவர் பேசினார்.
சென்ற ஆண்டு வரவு செலவு கணக்ககளை பொருளாளர் எம்.ராஜேந்திரன் சமர்பித்து பேசினார்.
தமிழக பிரம்மஞானி என்ற தகவல் மலரினை தலைவர் வி.எ.நாகப்பன் வெளியிட உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், வி.பழனி, ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் எம்.கே.நடேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக வி.எ.நாகப்பன், உப தலைவராக எம்.ஜி.ராமன் செயலாளராக எஸ்.முனிவேலன், பொருளராக எம்.ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்களாக என்.சுகுமார்ல, எல்.திருநாவுக்கரசு, ஆர்.மூர்த்தி தமிழக ஆட்சி மன்ற குழு உறுப்னிர்களாக வி.எ.நாகப்பன், எம்.ஜி.ராமன், ஆர்.மூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உறுப்பினர்கள் எம்.எஸ்.அழகிசாமி, செ.நா.ஜனார்த்தனன், வி.பழனி, தணிகை செல்வம், எம்.அன்பழகன், என்.வேல்ராஜ், வி.டி.ராஜேந்திரன், பி.ஜோதிலிங்கம், எ.சி.பிரதிவிராஜன், எ.பிரபாகரன், கே.ஹரிகிருஷ்ணன் டி.உதயகுமார் உள்பட பலர் பேசினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment