உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 29 October 2024

உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு!

உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு!

அணைக்கட்டு, அக்29-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பிச்சாநத்தம் பகுதியில் உயர்நிலை பள்ளி உள்ளது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்ற நிலையில் இங்குள்ள மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி செல்ல வெகு தொலைவு செல்வதால் மாணவர்கள் மிகவும் தோல்வியும் புத்தகப் பைகளை சுமந்து செல்வது பெற்றோர்களுக்கு வேதனை அளிப்பது மட்டுமல்லாமல் மேல்நிலைப்பள்ளி அணைக்கட்டு அல்லது ஒடுகத்தூர் சென்று படிக்க வேண்டும் பிச்சாநத்தம் உயர்நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் போது கீழ் கொத்தூர் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியில் சேரவும் அதே போல் டிசி குப்பம் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள்
மேல்நிலைப் பள்ளி செல்ல உதவும் எனவே பகுதி மக்களின் எதிர்பார்ப்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா என பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பு

அணைக்கட்டு வட்டம் 
அணைக்கட்டு சுற்றி உள்ள ஊராட்சிகள்  தாங்கள் முதல் கீழ் கொத்தூர் வரை  15 கீலோமீட்டர்  உள்ள குக்கிராமத்தில் மருத்துவ வசதி பெற
அணைக்கட்டு வர வேண்டும் அப்பகுதி மக்கள் சின்ன ஓங்கப்பாடி அருகில் 
ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்க வேண்டும் வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஏபி நந்தகுமார் அணைக்கட்டு எம் எல் ஏ நேரடி பார்வைக்கு எடுத்துச் சென்று அரசு அதிகாரிகள் பள்ளி விவகாரத்திலும் மற்றும் மருத்துவமனை விவகாரத்திலும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து தருமாறு பொதுமக்கள் சார்பிலும் சமூக அலுவலர்கள் சார்பிலும் கோரிக்கையாக வைத்தனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad