வேலூர்,அக்29-
வேலூர் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் 06.11.2024 அன்று நடைபெறவுள்ள குறைகேட்பு நாள் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் வருகின்ற 06.11.2024 (புதன் கிழமை) அன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள "காயிதே மில்லத்" கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே. வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment