இடைநிலை கல்வி வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் எஸ் மகாலிங்கம் பதவி ஏற்பு பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பாராட்டு
வேலூர் ,அக்17-
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி அலுவலராக பணிபுரிந்து வந்த திரு எஸ் மகாலிங்கம் அவர்கள் பதவி உயர்வு பெற்று வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக இடைநிலை கல்வி பிரிவிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் பணியில் சேர்ந்தார்.
அன்னாரை ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் டி. மனோகரன், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க செயலாளர் எஸ் எஸ் சிவ வடிவு
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர் ஜெயக்குமார் தலைமையிட செயலாளர் திருக்குமரன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க செயலாளர் சங்கர்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜெயதேவரெட்டி, தேவராஜ் சேரலாதன் ஜி ராஜேந்திரன் தாஸ் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநிலத்த்லைவர் அ.சேகர், ஜாகடோ செய்திர்தொடர்பாள வாரா, உருதுவழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமதுஷாநவா1 உள்ளிட்டோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment