கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில்
உதவி இயக்குனரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை மனு
குடியாத்தம் ,அக் 22-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கைத்தறி நெசவாளர்களுக்கு
வழங்கப்படும் கூலியினை பணமாக வழங்க கோரியும், அடிப்படை கூலியில் 15 சதவீத கூலியினை உயர்த்தி வழங்குமாறும், தேசிய கைத்தறி வளர்ச்சி மையத்தின் மூலம் வழங்கப்படும் நூல்கள் தரமற்றமையாக இருப்பதால் தரமான நூல்களை வழங்க கோரியும், நெசவாளர்களுக்கு ஓய்வு நிதி ரூபாய் 1200 லிருந்து 3000 ஆக உயர்த்தி வழங்க கோரியும், வேலூரில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் திருமதி. சத்யபாமா அவர்களிடம் குடியாத்தம் அதிமுக நகர செயலாளர் ஜே.கே.என். பழனி கோரிக்கை மனு அளித்தார் .உடன் மாவட்ட கழக துணை செயலாளர் ஆர். மூர்த்தி,கைத்தறி நெசவாளர் கூட்டுறவு இணையத்தின் முன்னாள் தலைவர்கள் எம்.ட்டி. திருவேங்கடம், கே.எம். தியாகராஜன், நமச்சிவாயம் உள்ளிட்டோர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment