கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்க நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரிடம் மனு.!
குடியாத்தம் , அக்21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கும்மாறு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அவர்களிடம் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன்அவர்கள் மனு அளித்தார்
குடியாத்தம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேம் பள்ளி கூட்ரோடு முதல் லட்சுமி திரையரங்கம் வரை சித்தூர் கேட் முதல் நான்கு முனை கூட்டு ரோட் வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு திட்ட மதிப்பீடு வரையறை செய்து
மனு அளித்தார்
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கே என் நேரு அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதி அளித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment