வடகிழக்கு பருவமழை வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் கசாயம் லயன்ஸ் கிளப் சார்பில்
குடியாத்தம் ,அக் 22-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும் வைரஸ் காய்ச்சல்கள் வராமல் தடுக்கும் பொருட்டு மாணவர்களுக்கு ஆடாதோடா நிலவேம்பு குடிநீர் காசாயம் குடியாத்தம் நகர லயன்ஸ் கிளப் மற்றும் குடியாத்தம் அரசு சித்த மருத்துவமனை இணைந்து வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு லயன்ஸ்கிளப் தலைவர் ஜெ. பாபு தலைமை தாங்கினார் தட்டபாறை அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 700 பேருக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மேனகா அவர்கள் கலந்துகொண்டு வழங்கினார் நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிபாஸ்கர் ஊர் நாட்டான்மை தேவராஜ் லயன்ஸ் சங்க உறுப்பினர் கோபி மருத்துவமனை பனியாளர் சங்கரலிங்கம் துவக்கபள்ளி தலைமை ஆசிரியர் துவக்கபள்ளி மற்றும் மேநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment