வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்களை கண்டதும் இருசக்கர வாகனத்தை திருப்பிச் சென்ற திருடர்கள் மடக்கிப்பிடித்த காவலர்கள்
குடியாத்தம் ,அக்14-
வேலூர் மாவட்டம் குடியாத்தம்குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வீராசாமி உட்பட போலீசார் சித்தூர் கேட் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு டூவீலரில் வந்த நாலு பேர் போலீசார் இருப்பதை கண்டு டூ வீலரை நிறுத்தி திரும்பி செல்ல முயன்றனர் இதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து ஆவணங்களை கேட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அதவுள்ளா மகன் சையத் அகமத் (வயது 25) தாயகம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஷ் (வயது 25) சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் தீனா (வயது23) கஸ்பா அரசமரத் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் விஷ்ணு (வயது 25 )என்பதும், இவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வண்டி என்பது தெரிய வந்தது இத எடுத்து நான்கு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்காக அழைத்து வந்து மேலும் விசாரணை செய்தனர் விசாரணையில் குடியாத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் டூவீலரை திருடியது ஒப்புக்கொண்டனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அகமத் விஷ்ணு தீனா விக்னேஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் தாலுகா போலீசார், வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் பெயர் மோகன் (வயது 28)விக்கி என்கிற விக்னேஷ் (வயது24)
என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பது தெரிய வந்தது இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment