பொது மக்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி அதிரடி கைது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 14 October 2024

பொது மக்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி அதிரடி கைது.

பொது மக்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி அதிரடி கைது.

வேலூர்,அக்14-

வேலூர் மாவட்டம் கூலி தொழிலாளிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு ரவுடி அதிரடி கைது. 
வேலூர் பில்டர் பெட் சாலையில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வரும் சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலாளி பாபு பாஷா (வயது 39) என்பவரிடம் கடந்த 10ம் தேதி வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த ரவுடி உதயா கத்தியை காட்டி பணம் பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பாபபாஷா வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி உதயா என்கிற உதயகுமாரை கைது செய்து இன்று(அக்.13) சிறையில் அடைத்துள்ளனர். கைதாகியுள்ள ரவுடி உதயா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad