ஆர்யா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா
குடியாத்தம் , அக்21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்யா வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கிடையே நடைபெற்ற 9 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆர்யா பள்ளியில் திங்கட்கிழமை 21 10 2024 காலை 10 மணி அளவில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா அவர்களும் கலந்து கொண்டு குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்
இவ்விழாவில் ஆர்யா பள்ளி தலைவர் திரு தண்டபாணி அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளி முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி அவர்கள் சிறப்புரையாற்றினார்
ஒன்பதாம் வகுப்பு மாணவன் நித்திஷ் குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் ஸ்ரீதர் மற்றும் பள்ளி அனைத்து அறங்காவலர்களும் கலந்து கொண்டு இவ் விழாவினை சிறப்பித்தனர்
இந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் இடையே நடைபெற்ற விளையாட்டுகளான நீளம் தாண்டுதல் கோகோ பந்து எறிதல் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயம் குண்டு எறிதல் ஈட்டி எறிதல் கபடி போன்ற பல்வேறு போட்டிகளில் வந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் இரண்டு மற்றும் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழிடம் பதக்கங்களும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்
இறுதியாக பதினொன்றாம் வகுப்பு மாணவி பிரணதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார் நாட்டுப் பன்னுடன் நிகழ்ச்சியை இனிதே முடிவடைந்தது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment