வேலூர் ,அக் 27-
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஜினிகுமார் தலைமையிலான போலீசார் இன்று 26.10.2024-ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹீலிமாவு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாதா (வயது 19) த/பெ ராகவேந்திரா என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணை போலியான பெண் நபரின் புகைப்படம் வைத்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் நெருங்கி பேசி பழகி பின்னர் அந்த பெண்ணின் புகைப்படங்களை பெற்று அதனை நிர்வாணமாக சித்தரித்து அதை அவருக்கே அனுப்பி மிரட்டி ஆபாசமாக வீடியோ கால் செய்ய சொல்லி அதனை தனது போனில் Record செய்து மீண்டும் அந்த பெண்ணுக்கே அவரது ஆபாச வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேற்படி பதிப்பகத்தில் வேலை செய்யும் இந்த நபர் Facebook & Instagram போன்ற சமுகவளைதளங்களில் பல போலியான கணக்குகளை நிர்வகித்து அதன் மூலம் பல பெண்களை ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவருகிறது. எனவே சமூக வளைதளங்களில் குறிப்பாக பெண்கள் தங்களது அறிமுகமில்லாத கணக்குகளில் இருந்து வரும் மெசேஜ்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மேலும் தங்களது புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை சமுக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் சைபர் கிரைம் காவல் துறையினரின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment