வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து புதிய தகவல்
வேலூர் ,அக் 27-
வேலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் வேலூர் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக இரகசிய தகவல்கள் தருவதாக கூறி கமிஷன் பணத்தை கேட்டு ஏமாற்றி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்தபுரா பகுதியை சார்ந்த தாவூத் இப்ராஹிம் என்பவரை சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஜினிகுமார் தலைமையிலான போலீசார் இன்று 26.10.2024-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சைபர் கிரைம் சம்மந்தமாக புகார்களுக்கு 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற வலைதளத்திலும் புகார் அளிக்கலாம் என்று சைபர் கிரைம் காவல் துறையினரின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment